வீதியில் பிச்சைக்காரன்.

கவி இலக்கம் 26

நான் வீதியில் கண்ட பிச்சைக்காரன்.
உடல் மெலிந்து,
வயிறு வற்றி,
தலை வழுக்கை
விழுந்து,

மேலாடை
கிழிந்த வண்ணம்
நின்றவன்,

அவன் ஒரு
பிச்சைக்காரன்,
எனினும்,

கொடை வள்ளல்
பாரிக்கு ஒப்பானவன்,
தான் உண்ண
வழி இல்லாத போதிலும்,

தன் கையிலிருந்த
ஒரு இட்லியை,
தனது அருகேயிருந்த
நாயிற்கு கொடுத்த
வள்ளலவன்,

நான் அவனிடம்
வினவினேன்,அவன்
பதில் கேட்டு
வியந்தேன்,

ஐந்தறிவு ஜீவன்
இது,நன்றி உள்ள
மிருகம் இது,

நான் இறப்பினும்
இறப்பேன்,அதை
இறக்க இடமளியேன்,

என்னை நம்பி
வந்த ஜீவனது,
அதை பட்டினி
போடவும் ஏன் மனம்
அனுமதியாது,

என்று கூறிய
அவன் வார்த்தை,
அவனை அந்தப்
பாரியிலும்
மேலுயர்த்தி விட்டது.
-விண்ணவன் – குமுழமுனை.

Author:

ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

Continue reading