“வெட்டு”

சிவாஜினி சிறிதரன்
சந்த கவி இலக்கம் 204

“வெட்டு”
அப்பம்மா நட்ட மாமரம்
மரம்விட்டு மரம் தாவும்
மந்தியின் தொல்லையால் வெட்டி வெட்டி வந்தோம்!

மின்வெட்டு
மின்துண்டிப்பு சொல்லியும் வெட்டும்
சொல்லாமலும் தடைப்படும்!

மாவீரன் பண்டாரவன்னியனை
லெப் வொன்டிரி பொக்கினால் கற்சிலைமடுவில் தோற்கடிக்கபட்ட நினைவை
கற்சிலையில் வெட்டி பதியபட்டு உள்ளது!

மாவீரன் பண்டாரவன்னியன் வீரத்தை தியாகத்தை பலர்
பார்வை இடுகின்றனர் இன்றும்!

நன்றி
27.09.25

Author: