ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர் தமிழ்மணம் கமழும் தேசத்தை நேசித்த நெஞ்சங்களில் சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில் துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க மறந்தனர்...

Continue reading

வெட்டு

ராணி சம்பந்தர்

அன்று சின்ன வெட்டு
சீறிய உதிரம் கொட்டக்
கண்டு உடல் கூசிடுமே

இன்று துட்டு வாங்கியே
சட்டுப்புட்டென வேட்டு
முழி பிதுங்க பென்னம்
பெரிய வாளால் வெட்டு

ஒரே தரத்தில் தலை, முண்டம்
வேறாய்த் துடிக்கத் துண்டம்
துண்டமான குடல் பேசிடுமே

என்றுமிலாத போதை ருசி
பாதை மாறிய குஷியில் நாறி
இளையோர், முதியோர் என்று
காரணமிலாத கத்திக் குத்து
வெட்டில் கதறிக் குதறிடும்
உயிர் பேச்சின்றி மூசிடுமே .

Author:

வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

Continue reading