வெட்டு..

வசந்தா ஜெகதீசன்
வணக்கம்
வெட்டு…
சண்டையும் சரிதமும் வெட்டுக்குள் ஓன்றும்
சாலவும் சிறந்திட்ட வரலாறு செப்பும்
காணியில் வெட்டு வரம்பாகும் எல்லை
காலத்தின் வெட்டு திரும்பாத இளமை

கல்வெட்டுச் சான்றுகள் காலத்தின் பதிவு
காணியின் வெட்டுக்கு எல்லையே அளவு

மரத்தில் வெட்டு ஆயுளைக் கணிக்கும்
வேள்வியில் வெட்டு வேண்டுதல் கூற்று

மின்வெட்டு வாழ்வுக்கு அவதி
வேண்டின் வெட்டு சூழலின் காப்பு
துணிகளின் வெட்டே தையலின் மதிப்பு
ஆழத்தின் வெட்டு
காயமாய் பதியும்
இராவணன் வெட்டு தமிழுச் சான்று

நிறையில் வெட்டு நீதிக்கு முரண்
வாள் வெட்டு வரம்பிற்குள் செயல்

நன்றி
மிக்க நன்றி

Author: