வெட்டு

ஜெயம்

வெட்டு ஒன்று துண்டு இரண்டென
எடுப்பாய் முடிவை பட்டு பட்டென
எட்டிப்பார்த்து பயந்து பதுங்கி இராது
தொடுப்பாய் செயலை வருவதை பாராது

உடனுக்குடன் ஒன்றை கதைப்பதும் நலமே
மறைப்புகளில்லாத மனதிற்கு இல்லையே பயமே
நடப்பதை மறைக்காது உச்சரிக்கும் உளமே
கறையில்லா வாழ்க்கையால் அடைந்திடும் ஜெயமே

முகத்தில் அடித்தாற்போல் கதைக்கின்றார் என்பார்
வளர்ப்பு சரியில்லையென புறங்கூறி திரிவார்
அகத்தின் அழுக்கில் சுகங்காணும்
பெரியார்
அழகான வெள்ளை உள்ளத்தை புரியார்

Author: