மறவர்குலத்தின் மாதரசி…..

ரஜனி அன்ரன் (B.A) மறவர்குலத்தின் மாதரசி.....08.10.2026 முத்துக்கள் நிறைந்த தீவாம் எழில்கொஞ்சும் மன்னார்த்தீவில் மண்ணிற்கும் பெண்ணினத்திற்கும் பெருமைசேர்க்க மண்ணிற்காய்...

Continue reading

சிவதர்சனி

வியாழன் கவி 1560!
மாற்றத்தின் திறவுகோல்!

மாறாத்தன்மை கொண்ட மாற்றம்
ஏற்றம் நம்மில் தந்திடும் நாளும்
குற்றம் குறைகள் கொண்ட போதும்
கூன் நிமிர்த்த வேண்டுமே மாற்றம்!

சாற்றும் வெற்றி என்னும் சாரல்
சரிதம் ஆக வேண்டும் திறவுகோல்
புரிதல் நம்மில் உயர்ந்திட வேண்டும்
புன்னகை ஒளியே தெறித்திட வேண்டும்!!

இரும்புக்கூட்டு இதயம் தன்னில்
இளகும் அன்பை இணைத்துக் கொள்ள
கலகம் மாறிக் கருணை சிந்தும்
காலம் தோழமை சூடி வெல்லும்!!

விஞ்ஞான மிரட்சி வினைத்திறனாம்
அஞ்ஞான இருளில் அக விழியாம்
பஞ்சமும் பனியாய் மூடிடவே
பரிதவிப்பில் அல்லாடும் மனிதமாம்!

திறவுகோல் நம்பிக்கை என்றிடலாம்
திறக்குமே கொடையெனும் பெட்டகமாம்
பிறக்கட்டும் புதுவித உத்திகளும்
புவனத்தின் தலைவிதி மாற்றிடவே!!
சிவதர்சனி இராகவன்
45/1/2022

Nada Mohan
Author: Nada Mohan

    பூக்கட்டும் 116 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 29-09-2026 யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய் சந்தோஷம் பிறக்கட்டும் கண்ணீர் நனைந்த மண்ணினிலே கனவுகள்...

    Continue reading