நன்றியாய் என்றுமே (727) 04,09.2025

நன்றியாய் என்றுமே Selvi Nithianandan மண்ணிலே மெல்லவே அகரத்தை கிறுக்கி கண்ணிலே நீர்வடிய கட்டி அணைத்தவர் அம்மாவின் முந்தானை கைவிடாத...

Continue reading

கலாதேவிபத்மநாதன்.

சந்தம் சிந்தும் சந்திப்பு

தலைப்பு பாமுக பூக்கள்

வண்ண வண்ண பூக்களே வாழ்த்துக்கள் பூக்களே
எண்ணமெங்கும் பாக்களே
எழிலோவியப் பூக்களே

நான்கைந்து மலர்களும் நறுமணப் பூக்களே
தோன்றலின் எண்ணங்கள் தோரண விழாக்களே

சின்னசின்ன ஆசைகள் சிறகடித்து பறந்தன புன்னகை சிந்தியே புகலிடம் பூண்டன

அரும்பாகி மொட்டாகி அழகிய மலராகி கருவாகி உருவாகி கவிதைகள் நூலாகி

உள்ளத்தில் ஊற்றாகி உதித்தன படைப்பாகி
தெள்ளிய ஞானத்தால் தித்திப்பு இல்லத்தில்

பாமுக பூக்களை பாரினில் உயர்த்திடும் நான்முகன் பூசத்தில் நாற்றிசையும் போற்றட்டும்

இருபது பலவாகி இலக்கத்தில் உயர்வாகி பெருகட்டும் உறவுகளே பெருமகிழ்வு கொள்வோமே

நன்றி வணக்கம்🙏🏻🙏🏻

கலாதேவி பத்மநாதன் ஈழத்தமிழர் வளாகம் இந்தியா

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெயம் நியதி நடப்பவைதான் நடக்குமென்பது காலதேவன் கணக்கு கடந்துபோகும்  நாட்களெல்லாமதை சொல்லிவிடும் உனக்கு தலைகீழாய் நடப்பினும் நிகழவேணுமென்பதே...

    Continue reading