” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

சக்தி சிறினிசங்கர்

இனிய இரவு வணக்கம்
திரு நடா மோகன் அவர்களே
திரு ப.வை.ஜெயபாலன் அவர்களே
மற்றும் பாமுக உறவுகளே!

சந்தம் சிந்தும் சந்திப்பு
கவித்தலைப்பு
பழமை!

அறிவியலும் அனுபவமும் அடங்கியதே பழமை
சிறியவனே சிறியவளே சிந்தையிலே இருத்து
பொறுமையுடன் கேட்டிடுவாய் போதகமும் வாயில்
புறுபுறுக்கும் பாட்டனும் பாட்டியும் பாக்கை
உரலில் இடிக்கும் ஓசையும்தான் இசையே
உரமாய்த்தான் வாழ்ந்தாரே உழுதுண்டு மகிழ்ந்தாரே
வரமாய்த்தான் நாம்பெற்றோம்
வாழ்வியலின் வனப்புகள்
தரம்குறைவு என்றெனவே தள்ளிவிட
வேண்டாம்
பழங்கதைகள் சொல்லும் பக்குவமும் கண்டாயோ
வளமான வாழ்வுக்காய் வாழ்ந்துதான்
காட்டினாரே
படிப்பறிவு இல்லை பல்கலைகள் வித்தை
நடிப்பனிலே நவரசமும் நல்கும் அந்த வாழ்க்கை
பழஞ்சோறும் கஞ்சியும் பால்சோறும் உண்டு
அழகான இல்லறமும் அமைந்ததுதான் பழமை
பழமையிலே நுண்ணறிவும் பறைசாற்றும் வல்லமையும்
தலங்களிலே எத்தனை தரமுயர்ந்த சிற்பமும்தான்
பழங்காலக் கட்டிடமும் பைந்தமிழ் வரலாறும்
இலக்கியமும் கூறிடுதே இன்பமும்தான் பழமையே

ப.வை.அண்ணா உங்கள் பாரியபணி
போற்றுதற்குரியது. மிக்க நன்றி!
திரு.நடா மோகன் அவர்களே உங்களுக்கும் மிகுந்தநன்றி!!
அன்புடனும் நன்றியுடனும் விடைபெற்றுக் கொள்கிறேன்.

Nada Mohan
Author: Nada Mohan