அதிகரிக்கும் வெப்பம்

நகுலா சிவநாதன் அதிகரிக்கும் வெப்பம் கோடை வந்தால் கொள்ளை மகிழ்வு வாடை குறையும் வசந்தப்பொழுதாய் வேளைதோறும் வெப்ப விடியல் வேண்டும்...

Continue reading

திருமதி .அபிராமி கவிதாசன்.

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம் -182
02.08.2022
“நட்பின் புத்தகமே”

நட்பின் இலக்கணமாய்
நல்வழி காட்டியவள்
விட்டுநீ பிரிந்தாலும்
விடாது தொடந்தவள்

உலகின் நியதியினை
உணர்த்தி புகட்டியவள்
கலகத்தீர் வறிந்து
கரைசேர்க்க துடித்தவள்

நன்மை தீமையினை
நாளும் போதித்து
புன்முறுவல் முகநக
பூத்து நகைத்தவள்

இன்பமும் துன்பமும்
இதயத்தில் தாங்கியே
நன்றென்றும் தீதென்றும்
நியாயத்தை தந்தவள்

நல்ல நண்பியாய்
நல்லதோர் புத்கமானாய்
எல்லைகள் இல்லலையம்மா
என்றும் நம்நட்பிற்கு

பாரினில் நடைபோட
பயிற்சிகள் தந்தவளே
தேரினில் எனையேற்றிய
தேவதை நீயன்றோ

என்னை வழிநடத்தும்
என்னவள் உன்வாய்மை
உனையின்றி ஒரணுவும்
உயிரும் அசையாதே

என் கவிக்கு உயிரோட்டம் தந்து என்னை
உற்சாகம் ஊட்டும் கவிஞர் . சக்திதாசன்
சகோதர்க்கு என் மனமார்ந்த .. நனிமிகுந்த
நன்றிகள் . 🙏

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading