அதிகரிக்கும் வெப்பம்

நகுலா சிவநாதன் அதிகரிக்கும் வெப்பம் கோடை வந்தால் கொள்ளை மகிழ்வு வாடை குறையும் வசந்தப்பொழுதாய் வேளைதோறும் வெப்ப விடியல் வேண்டும்...

Continue reading

திருமதி.அபிராமி கவிதாசன்.

13.09.2022
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம் 191

தலைப்பு !
“ எண்ணம் “
எண்ணம் என்னும்
என்றன் தோட்டம்
வண்ண மலர்கள்
வளர்ந்து செழிக்குதே //

மண்ணின் பெருமை
மலர்ந்து நின்றதோ
திண்ணம் கொண்டே
தீர்வாய் நகைக்குதோ //

நிலமும் விதையும்
நகமும் சதையுமாய்
வளமும் கொண்டிட
படரும் கொடியென //

சொல்லிலும் செயலிலும்
சிலர்உருவம் தெரியுதே
நல்வினை தீவினை
நாலுபேரைக் கொல்லுதே

உள்ளொன்றும் புறமொன்றும்
உள்ளங்கள் உளறுதே
வெள்ளி நகைப்புடனே
வினைகளை விதைக்குதே //

நாவென்னும் ஆயுதம்
நாற்புரமும் தாக்குதே
வாவென்ற உறவுகளும்
வாசலோடு நிற்குதே
எண்ணமொரு குரங்கென
என்தாத்தா கூறுவார்
திண்ணமுடன் கிளையிலே
திடமாய் நின்றிடு. //

நன்றி அண்ணா 🙏

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading