அதிகரிக்கும் வெப்பம்

நகுலா சிவநாதன் அதிகரிக்கும் வெப்பம் கோடை வந்தால் கொள்ளை மகிழ்வு வாடை குறையும் வசந்தப்பொழுதாய் வேளைதோறும் வெப்ப விடியல் வேண்டும்...

Continue reading

திரேஸ் மரியதாஸ் லண்டன்,சட்டன்

இன்றைய தலைப்பு
🌺மழை நீர்🌺

சோகங்களை மேகங்கள்
உற்றுநோக்கிக் கறுகறுவெனக் கனத்த மனதாய் கவலைகளைக் கருக்கட்டி ஓவென அழுகின்றதோவென
அப்பப் மழையைப் பார்த்து வியந்து
விண்ணாணமாய் நோக்குவதுவும் உண்டு

மழைநீரோடு எனது கண்ணீரையும் அப்பப்ப கலந்து கரைத்துவிடுவேன் விரைவாய் மீண்டும் ஆவியாகி இறந்துபோகாதவாறு நிறைவாய் சோறாக்கும் சேறான விவசாயிகளை
வாழவைத்து உளங்குளிரவைத்து
தரையை வளமாய் நிரையாக்க
வந்திடுவாய் மீண்டுமாய் என்னீரும் ஈரமான மழைநீராயென

மழைநீரே நீ சோவெனப் பொழிந்தபோது
ஆகா இதெல்லோ இன்பமென
நனைந்து உன்துளிகளுக்குள் விழுந்து
விளையாடியதுவும் அங்கங்க நீ சிந்திய நீரைப் பள்ளங்களில் அளைந்து
அள்ளிப் பள்ளியில் தெளித்ததுவும்
துள்ளித்துள்ளிப் பாய்ந்ததுவும்
முள்ளியாய்க் குத்துகிறதே உன்னைக் காணும்போதெல்லாம் தண்ணீரே வெந்நீராய்
ஆக்கம்-

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-07-2025 இயற்கை அழிவு ஒருபக்கம் இனக்கலவரம் மறுபக்கம் தியாகத்தின் விதை சரித்திரமாகி தாயகக்கனவு கலைந்த கதையிது… சேவல்...

    Continue reading