நன்றியாய் என்றுமே..

வியாழன் கவி 2203!! நன்றியாய் என்றுமே.. இன்றுமே என்றுமே இணைந்த குரலாகி இதயத்தை நனைக்கும் கீதம் இதுவன்றோ.. உரிமை கொண்டெழும் உணர்வின் ஆலாபனை பனியாய்...

Continue reading

நன்றியாய் என்றுமே..

வசந்தா ஜெகதீசன் இயற்கையின் ஈர்ப்பும் உலகியல் வளமும் உதவிடும் சேவையும் நானில காப்பும் நன்றிக்கு வித்தாய் பெற்றோர் பேறும் பெருநல வாழ்வும் கற்றோர்...

Continue reading

ரஜனி அன்ரன்

“ பேசாமல் பேசும் உலகமொழி “….கவி….ரஜனி அன்ரன் (B.A) 22.09.2022

மனித குலத்தின் ஆதிமொழி
ஆதிமனிதனின் ஆட்சிமொழி
மொழிகளுக்கெல்லாம் வழி சமைத்தமொழி
கண்ணாலே காவியம் சொல்லி
கைவிரல் அபிநயத்தை கலைநயமாக்கி
பேசாமலே பேசும் உலகப் பொதுமொழி
சைகை மொழியெனும் மெளன மொழியே !

செவிப்புலன் அற்றோர்க்கு எல்லாம்
விழிப்புணர்வு கொடுத்த மொழி
இனமதம் கடந்த பொதுமொழியாகி
பல்லுலகும் பேதமின்றியே பேசும்மொழி
தொல்லுலகில் எழுபது மில்லியன் பேருக்கு
கைகொடுத்த நிசப்தமொழி
சைகை மொழியெனும் மெளனமொழியே !

எண்ணக் கருக்களை வெளிப்படுத்த
வண்ணத் தகவல்களைப் பரிமாறிட
அங்கங்களை அசைவாக்கி
அபிநயத்தால் புலப்படுமே சைகைமொழி
சைகை மொழியை நாமும் கற்று
கேட்க பேச முடியாதோர்க்கு வழிகாட்டி
வல்லமையோடு அவர்கள் வாழ
வாழ்வில் ஒளியேற்றுவோம் நாமும் !

Nada Mohan
Author: Nada Mohan