சிவாஜினி சிறிதரன்

சந்த கவி இலக்கம்
113

பசுமை

பசுமை நிறைந்த நினைவுகள்
பாடி களித்த காலங்கள்
பழகிகளித்த உடன் பிறப்புக்கள்
பிரிந்து சென்றோம்

இயற்கை அன்னையவள்
இதமாய் பூமிக்கு
பசுமை ஆடையை போர்த்தி அழகு
பார்க்கின்றாள்

சாமத்தில் சாரல் மழை பெய்து
வெப்பத்தை தணிக்குது
வெண்கதிருக்கு பன்னீர் தெளிக்குது

வியர்வையில் நனைந்து
செங்குருதி சிந்திய விவசாயி
விதம் விதமாய்
விளைவிக்கும்
கோதுமை சோளம் பசுமையின் கோலம்

கண்ணுக்கு விருந்து
உடலுக்கு உணவு
மனதுக்கு மகிழ்வு!!

வனவளத்தை பாதுகாப்போம்
பசுமையை பேணுவோம்
பசுமை உலகை
ஆள்வோம்
வெப்பத்தை தணிக்க உழைப்போம்!!

நன்றி
சிவாஜினி சிறிதரன்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் பருவக் காலப் பாதிப்பிலே பங்கு கண்டு பொங்குவாய் உருவக் கோலச் சாதிப்பிலே முங்கியபடியே மொங்குவாய் கரும வினை...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்தகவி இலக்கம் _216 "பொங்குவாய்" தை திங்கள் வந்ததடி தோழி தரணிமெல்ல மகிழ்ந்தடி ஆதவனார் வந்தாரடி! பொங்கலிட்டோம் பூஜை...

    Continue reading