ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர் தமிழ்மணம் கமழும் தேசத்தை நேசித்த நெஞ்சங்களில் சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில் துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க மறந்தனர்...

Continue reading

மனோகரி ஜெகதீஸ்வரன்

இயற்கை

மதியேந்தி வானம் ஒளிர
மகிழ்வோடு உலகும் உறங்கும்
கதிர்பூட்டிக் கதிரோன் உலவக்
கலைந்தோடும் கனவும் பறந்து
சுதிகாவு அலையும் சுழன்று
சுகமாக்கும் காலை நனைத்து
புதிதாயே பூத்த பூவும்
புத்தூக்கம் தருமே ஈர்த்து

குடைபிடித்த வானம் கறுக்க
கொட்டிடுமே மழையை மேகம்
சடைவிரித்து மரமும் செடியும்
சத்துணவு தருமே நாளும்
நடைபழகு நதியும் கடலும்
நழுவியோடும் நிலத்தைத் தழுவி
முடைகழற்றி வாழ நாணல்
முன்சரிந்து மூழ்கி நிமிரும்

வான்தொடும் மலையின் முகடு
வந்துமோதும் தென்றல் காற்று
காணுகாட்சி யாவும் இனிதே
கழற்றிவிட வந்தது துயரை
பேணுவகை யறிந்து இயற்கை
பேணுவார்கே உண்டு பயனே
தோணுவகை தோன்றின் செயற்கை
சேதாரம் காட்டும் இயற்கை

இயற்கையே எமது தோழன்
அதிடுவதே தானம்
செயற்கை வெறும் சின்னம்
செறிந்தாலோ வரும் ஊனம்

மனோகரி

நன்மை

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

    Continue reading