நிலா முற்றம் 100

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
01-02-2026

பரந்த வான் முற்றத்தில்
பரவிப் படர்கிறது பால்நிலா
மெல்லிய மென்காற்று சில்லென்று வீச
இல்லத்து இனிய நினைவும் இணைய

நிலா முற்றத்தில் அம்மா குழையல்
நில்லா நினைவை அள்ளிச் சொல்ல
நீண்டது இரவும் நித்திரை தொலைத்து
வேண்டுமென் குடும்பம் இணைந்து

மீண்டுமொரு வேராய் முளைத்து
ஊன்றி வர வேண்டுகிறேன்-இது
நிழலாகாக் கனவு சுழலாகி மனதில்
தழலாகத் தோன்றுது நிலா முற்றத்தில்

Jeba Sri
Author: Jeba Sri

பூக்கட்டும் 116 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 29-09-2026 யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய் சந்தோஷம் பிறக்கட்டும் கண்ணீர் நனைந்த மண்ணினிலே கனவுகள்...

Continue reading

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading