தன்னம்பிக்கை 82

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 22-01-2026 சுற்றியிருக்கும் இருள் சூறையாட நினைத்தால் துணிவெனும் தீச்சுவாலை கொழுந்து விட்டெரியட்டும்! விழுந்தால் எழுவாய் விதிதனை வெல்வாய் விடியும்...

Continue reading

இ.உருத்திரேஸ்வரன்

கவிதை 220
தனிமை

நாமே அதை எடுத்துக்கொண்டால்
மிகவும் இனிமையாக இருக்கும்
நமக்கு மற்றவர்கள் கொடுத்தால்
இருக்கும் அது கசப்பாக

சிறந்த ஆசானாய் உற்ற நண்பனாய்
பல பாடங்களை கற்றுத் தரும்
நான் யார் என புரிய வைக்கும்
தன்மை உண்டு தனிமைக்கு

தனிமை என்னை கொல்கிறது
கொடுமை என புலம்புவோர்
தனிமையில் இனிமை காணப்பழகினால்
அதுவும் இன்பமான உலகமே

கருவறையின் அமைதியையும்
நிம்மதியையும் தருவது தனிமை
பல வெற்றிக்கு ஆணிவேராய்
படைப்புகள் தோன்றுமிடம் தனிமை

நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

    Continue reading