நேவிஸ் பிலிப்

கவி இல(120). 01/02/24
கைக்குள் கையாய் கைத் தொலை பேசி

கையளவு மனசுக்குள்ள
ஆயிரம் நினைவுகளை
பத்திரமா பொதிஞ்சு வைச்சு
உறவோடு உரையாடி
மகிழ்ந்த காலம் தொலைஞ்சே போச்சு

காலம் மாறிப் போச்சு
விஞ்ஞானம் வளர்ந்திடுச்சு
கைத் தொலைபேசி யுகம்
உள்ளங் கைக்குள் வந்தாச்சு

சுட்டு விரல் நுனியாலே
உலகை அளப்போமென்று
கண்ட கண்ட காட்சிகளை
கண்ணுக்குள்ளே பதிய விட்டு

கலாச்சார பாதிப்போடு
முகமறியா தீய நட்பும்
கொள்ளை கொலை மோசடிகள்
அனைத்தும் மலிஞ்சு போச்சு

நன்மையாய் நாலு நடந்தாலும்
தீமையும் வந்து சேருது
மாணவர் கவனம் சிதறுது
பெரியோர் மனம் பதறுது.

நன்றி வணக்கம்….

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading