” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

கமலா ஜெயபாலன்

குருதிப்பனல்
தெளிந்தோடும் நீரே தீமையில்லா ஆறு
தண்ணீரில் உப்பில்லை தங்க நீரது
ஒளியிழந்து உதிரமோடி ஓய்ந்தது ஓரினம்
உண்மை மறைக்கப் பட்ட வரலாற்றில்
வெளிச்சம் இல்லை வீடுகள் குப்பிவிளக்கில்
வேதனையை யாரறவர் வேட்டுவர் அறிவரோ
களித்தாடும் எம்மண்ணில் காடயர் கூட்டம்
கண்ணீராய் ஓடும் எம்மினத்தின் இரத்தம்.

அன்று நடந்தது இன்றும் கனக்குது
அவலம் அனைத்தும் அனலாய்க் கொதிக்குது
கொன்று குவித்தனர் குருதி குடித்னர்
கண்முன் மாந்தர் கலங்கி அழுதனர்
நின்று அறுத்தான் கடவுள் இன்று
நிலையில்லா வாழ்வில் நிகழ்ந்தது என்ன

முள்ளி வாய்க்கால் முன்றத்தில் நடந்தது
முற்றிலும் கொடுமை முறைக் கேடு
பள்ளிப் பிள்ளையும் பச்சிளம் குழந்தையும்
பருவம் பாராது பட்டழிந்தது பதைக்குதே
அள்ளி எடுத்தான் ஆருயிர் அனைத்தையும்
அத்தனையும் குருதிப் புனலாய் பாய்நத்து
கொள்ளி வைக்காமல் குழியில் போனதை
கொட்டி அழுதாலும் குறையாது கோபம்

Nada Mohan
Author: Nada Mohan