பாசப்பகிர்வினிலே……58
பாசப்பகிர்விலே!
Jeya Nadesan
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-02.07.2024
கவி இலக்கம்-272
„பள்ளிப்பருவம்“
—————
பருவ காலம் பார்த்து
பள்ளி சென்றோம்
பாடங்கள் பல கற்றோம்
பழக்க வழக்கங்கள் பலதும் பெற்றோம்
பாரச்சுமையாய் புத்தக பை கொப்பிகளுடன்
சாப்பாட்டு பொட்டலங்களை நாளாந்தம் சுமந்தோம்
நல்ல நண்பிகள் நட்பிற்கு உதாரணமாக பள்ளி வாழ்வில் மறக்க முடியாதவர்களான
உறவாக இருந்தனர்
ஆசிரியர்கள் அன்பால் அணைத்து அடியால்
பாடம் தந்து கல்வி ஊட்டினர்
பள்ளிப் படிப்பில் சோதனையில் கோட்டை விட்டோர் சிலர்
பள்ளி படித்து முடித்து. வீடு திரும்புகையில். பிரிவு எனும் கொடுமை. எவராலும் தாங்க முடியாதவையே. நாம் படித்த வகுப்பறைகள். வளாகம் ஆசிரிய ஆசிரியைகள் மாணவர்கள்
என்றும் எம் மனதில் நினைவாக இருக்கும்
படித்து முன்னேறி பட்டம் பெற்றோர் பலர்
சென்ற இடமெல்லாம் சிறப்பு பெறும் கல்வியை
தினமும் பள்ளி சென்று
பட்டங்கள் பலதும் பெற்று
வீட்டிற்கும் நாட்டிற்கும்
நற்பணி செய்து நாடு போற்ற வாழ்வோமாக
ஜெயா நடேசன்
ஜேர்மனி
