முயற்சி தரும் பயிற்சி 774

செல்வி நித்தியானந்தன் முயற்சி தரும் பயிற்சி சரீரத்தின் பாதுகாப்பு சஞ்சலமற்ற தற்காப்பு சந்தோச முயல்வு சரிநிகரான நகர்வு காலையிலே. சேர்வும் கற்றதை...

Continue reading

முயற்சி தரும் பயிற்சி

செல்வி நித்தியானந்தன் முயற்சி தரும் பயிற்சி சரீரத்தின் பாதுகாப்பு சஞ்சலமற்ற தற்காப்பு சந்தோச முயல்வு சரிநிகரான நகர்வு காலையிலே. சேர்வும் கற்றதை...

Continue reading

அட என்னடா பொல்லாத வாழ்க்கை

ஜெயம் தங்கராஜா

விருப்புத்தலைப்பாக

கவி 737

அட என்னடா பொல்லாத வாழ்க்கை

எல்லாமே சிலகாலம் தான்
இதை அறிந்தும் அறியாது நகர்கின்றது இந்தக் கோலந்தான்
விதியும் வேடிக்கையாக நடப்பவற்றை மறைத்து ஆட்டிப்படைக்கின்றது
போதாது இதுவென சில மனிதரால் துன்பமும் ஊட்டப்படுகின்றது

தாங்கி நடாத்தும் இளமையும் கடைசியில் கைவிட்டுவிடும்
கட்டியணைத்த உறவும் எட்டவே விட்டுப் போய்விடும்
ஒட்டியிருக்கும் உடலுடன் என்ற உயிரும் சொல்லாமல் வெளியேறிவிடும்

அட இதுவென்னடா பொல்லாத பூலோக வாழ்க்கை

புன்னகையைத் துரத்தி வலிகளின் நுழைவு
நிசம் என நினைத்தவைகள் நிழலென விழைவு
கண்ணீர் துளிகளை துணையாக்கிய வெறுமை நிலை
இதுதானே இந்த அறியாத வாழ்வின் இறுதிநிலை

மனதுடன் தொடர்பில்லாத வெளிவேட உறவுநிலை
மாறினாலும் மாறிமாறி ஏற்பட்டுக்கொள்ளும் காயங்கள்
கலங்கும் மனமோ குரூரமானவர்க்குள் நிம்மதியைத்தேடி
சரிசெய்ய முடியாதே நசுங்கிப்போன வாழ்க்கை

சிலரை இங்கே பழகியும் சரியாகப் புரியமுடியவில்லை
பலரின் மனதின் கொள்ளளவை எள்ளளவும் அறியமுடியவில்லை
பாலெது கள்ளெது என்பதை அருந்திப்பார்க்காது தெரியாது
உண்மையாக இருப்பவர்களிங்கே விரல்விட்டு எண்ணக்கூடிய கொஞ்சப்பேரே

விரும்பிய வாழ்கை எப்போதுதான் வரும்
தேடும்போது கிடைக்கவில்லை தேடாதபோதா கிடைக்கப்போகின்றது
இன்பத்தை உணர்ந்ததைவிட வலிகளை உணர்த்திடவா இந்த வாழ்க்கை
அழகாய் அமையாவிடினும் அமைந்ததை அழகாக்கிய நடிப்பான விந்தை வாழ்க்கையிது

ஜெயம்
08-08-2024

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading