முயற்சி தரும் பயிற்சி 774

செல்வி நித்தியானந்தன் முயற்சி தரும் பயிற்சி சரீரத்தின் பாதுகாப்பு சஞ்சலமற்ற தற்காப்பு சந்தோச முயல்வு சரிநிகரான நகர்வு காலையிலே. சேர்வும் கற்றதை...

Continue reading

முயற்சி தரும் பயிற்சி

செல்வி நித்தியானந்தன் முயற்சி தரும் பயிற்சி சரீரத்தின் பாதுகாப்பு சஞ்சலமற்ற தற்காப்பு சந்தோச முயல்வு சரிநிகரான நகர்வு காலையிலே. சேர்வும் கற்றதை...

Continue reading

அன்னை தெரேசா

நேவிஸ் பிலிப் கவிஇல(144) 29/08/24

விதைகள் பதர்களனால்
விளைச்சல் இருப்பதில்லை
தடாகத்தில் வேர்கள்
ஆழப் பதியாவிடில்
தாமரை மலர்வதில்லை

அன்பின் அடித்தளத்தை
ஆழத் தோண்டி
ஆன்மீக ஆறுகளை
அணைகட்டி வைத்து

ஒற்றுமை ஓடையிலே
நீந்துகின்ற மீன்களென
வாழ்ந்த பெற்றோரின்
வளர்ப்பில் வளர்ந்தவர்

அவர்களின் வாழ்வே
மகளின் வாழ்வுக்கு
விளக்குத் தூணாக

மனமெனும் நிலத்தில்
கொத்துக்கொத்தாய்
கதிர்கள் வளர்ந்து
நற்செயல்கள் நிறைவேற
வழி வகுத்தது

அறிவுரை அலைகள்
நிறுத்திச் சென்ற
சிறுதுளிகளால்
நிமிர்ந்தார் அன்னை தெரேசா

தன்னலமறியா தாயுள்ளம்
பிறருக்காய் வாழ்ந்த
கருணை உள்ளம்
காலத்தின் கணக்கினிலே
உயர்ந்து நிற்கும் உன்னதம்
அன்னை தெரேசா.

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading