உயிரான உறவு 86
உயிரான உறவே…….
தியாகத்தின் தீபம்
“ தியாகத்தின் தீபம் “….கவி…ரஜனி அன்ரன் (B.A) 26.09.2024
தமிழ்த்தாகம் தணிக்க
தன் தாகம் ஒறுத்து
தன்னையே ஈகம் செய்த
தியாகதீபம் அண்ணல் திலீபனின்
தியாகநாளாம் புரட்டாதித் திங்கள் இருபத்தியாறு
உன் தியாகம் என்றும் எம் நினைவோடு
உன் கனவு இன்றும் உயிர்ப்போடு தான் !
உன் உண்ணாநோன்பு உலகிற்கு எடுத்துக்காட்டு
உன் தியாகம் எமக்கு ஒரு உத்வேகம்
உன் தியாகம் எமக்கொரு விளக்கு
தியாகத்தின் வழிகாட்டி நீ தியாகத்தின் சுடர் நீ
தியாகத்தின் உச்சத்தைத் தொட்ட அண்ணலே
தியாகத்திலும் தியாகம் உன் தியாகம்
தியாக வேள்வியில் தீபஒளி ஆனாயே !
நம்பிக்கையின் விதைகளை
இனத்தின் விடியலைக் காட்டியது உன் மோனத்தவம்
உறங்காத இரவுகளை உயிர் வாடும் நிலையினை
சொல்லியதே உன் கண்கள்
தியாகத்தின் பரமனே மரணத்தை வென்றவனே
நீ தாங்கிய தீபம் உணர்வின் உந்தல்
வார்த்தைகளின் மெளனத்தில்
உன் உறுதியில் தியாகத்தில் என்றும் வீரம் வாழும் !
Author: Nada Mohan
-
By
- 0 comments
-
By
- 0 comments