முயற்சி தரும் பயிற்சி 774

செல்வி நித்தியானந்தன் முயற்சி தரும் பயிற்சி சரீரத்தின் பாதுகாப்பு சஞ்சலமற்ற தற்காப்பு சந்தோச முயல்வு சரிநிகரான நகர்வு காலையிலே. சேர்வும் கற்றதை...

Continue reading

முயற்சி தரும் பயிற்சி

செல்வி நித்தியானந்தன் முயற்சி தரும் பயிற்சி சரீரத்தின் பாதுகாப்பு சஞ்சலமற்ற தற்காப்பு சந்தோச முயல்வு சரிநிகரான நகர்வு காலையிலே. சேர்வும் கற்றதை...

Continue reading

அபிராமி கவிதாசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்-284, தலைப்பு!

“ஆசான்”
……….
கற்றவற்றைக்
கற்பிக்கும் ஆசான்
கண்கண்ட
கடவுளென்றால் உண்மை!
குற்றமற்று-நீ வளர்வதற்கு ஆசான்சொல்
கேட்டால் வரும்
மேன்மை!

மாதாபிதா
குருதெய்வம்
என்பார்
மறக்காமல்
மதிப்பவரே
உய்வார்!
கல்விதரும்
ஆசானே
ஈசன்
அவர்கருத்தை
ஏற்கும் நீ
தாசன்!

வினாவென்றே
நீ போடு
தடை!
விரிவாகத்
தந்திடுவார்
விடை!
ஆசானின்
சொற்படி நீ
நடப்பாய்
அனைத்தையுமே
வென்றே நீ
முடிப்பாய்!

பாடங்கள்
படிப்பதற்கே
எழுவாய்
ஆசானடி
தொட்டுநீயும்
தொழுவாய்!
பாடசாலை
செல்வதற்குத்
துடிப்பாய்
ஆசான்சொல்
வார்த்தைகளைப்
பிடிப்பாய்!

ஆசானின்
கருத்துக்கிலை
மறுப்பு
கவனத்துடன்
நீ கேட்டால்
சிறப்பு!
மாசற்ற
ஆசானைப்
போற்று!
மறக்காமல்
அவருரையை
ஏற்று!

பெண்ணாக
ஆணாக
இருப்பார்
அவர்பேசும்
தெய்வமென
இனிப்பார்!

குற்றங்கள்
சுமத்துவதை
விடுப்பாய்
குருமார்கள்
யாவரையும்
மதிப்பாய்!

.தமிழ்ச்சங்க ஆசிரியர்.
.அபிராமி கவிதாசன்.
.22.10.2024

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading