சிவா சிவதர்சன்

[ வாரம் 284 ]

“சலவை”

ஆடைகளில் படியுமழுக்கு ஒரு சலவையில்போகும்
மனங்களில் சேருமழுக்கு எங்ஙனம் நீங்கும்?
சுத்தஞ்சுகம்தரும் என்பது ஆன்றோர் வாசகம்
நீர்கொண்டு உடலுமுடையும் சுத்தமாதல் சாதகம்

உள்ளத்தை மூடுமழுக்கை நீரினால் கழுவுதல் அசாதாரணம்
அறிவுடமை அன்புடமை வெருவந்த செய்யாமை உள்ளமதை சுத்தமாக்கும்
பிறரை ஏமாற்றிவாழுவோர் பயன்படுத்துவதும் மூளைச்சலவை
தீதொழித்து நன்மைவளர பயன்படின் எத்துணை நன்மை?

பதவிக்காக ஏமாற்றிப்பணம்பறிப்பவரால் ஏது மேன்மை?
ஏமாறுவோர் சிந்தித்தால் ஏமாற்றுவோர் ஒழிவது உண்மை
சலவைக்கல் மாளிகையில் சலவைப்பட்டாடை பூண்டு வாழ்ந்தாலும்
நற்பண்புகளில்லாமல் திரிந்தபாலை பொற்குவளையில் பருகியது போலாகும்

இன்றைய ஆட்சியாளரும் சலவையிலும் மாறா கறைபடிந்தோரே
கடன்பெற்றே கடனை அடைக்கும் அதிசய மேதாவிகளே
தலைக்குமேல் வெள்ளம்பாய அரசை எவரும் ஆளமுடியாத நிதிநிலையில்
மக்களின் சலவையில் அழுக்குகள் அகலும் புதிய அரசு தோன்றும்

“புதுமைக்குவண்ணான் கரைகட்டி வெளுப்பான்”பழமொழி கூறுவதுபோல்
புதிய அரசும் புதுமையாய் சலவைசெய்யும் என நம்புவோம்”

நன்றி வணக்கம்
சிவா சிவதர்சன்.

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading