13
Nov
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
13-11-2025
ஐரோப்பிய முதல் தமிழ் ஒலியே
அகிலமெங்கும் அலை ஓசை
உலகமெங்கும் கலைஞரை...
12
Nov
முதல் ஒலி
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
புலம்பெயர் மண்ணினிடத்திலே
கண் அயராத தமிழ் மொழியில்
வலம் வந்ததிலே வாசமுடனே
பூத்துக் குலுங்கிய நேசமுடன்
மக்கள்...
12
Nov
முதல் ஒலியின் அரசன் பகுதி 2
-
By
- 0 comments
ஜெயம்
சொற்கள் மட்டும் இருந்தால் போதுமா
அதற்கு மெய்யான உயிர் தந்தவராம்
இன்று அந்தக்குரலுக்கு நம்...
பண்டிகை வந்தாலே
சிவதர்சனி இரா
வியாழன் கவிதை நேரத்துக்காக..
கவி இலக்கம்-2052
பண்டிகை வந்தாலே..
காலங்கள் விரைந்தோடும்
காத்திருப்பு பலமாகும்
சோர்ந்திருந்த உளத்திலெல்லாம்
சோர்வகன்று சுறுசுறுப்பாகும்..
வீடு வாசல் சுத்தம் காணும்
விருந்துகளும் தடல் புடலாகும்
பலகாரச் சூடு மிகும்
பக்கத்துக்காரர் கூடும் காலமாகும்..
உறவுகளும் கூடிக்கொள்ளும்
உணர்வுகளும் பரவடமாகும்
உள்ளத்தில் உவகை பொங்கும்
உத்வேகம் கடலாய் ஆகும்
ஊரில் தானே இத்தனை ஆகும்
ஊர் விட்டே வந்தால் மாற்றமாகும்
பேருக்கும் மட்டும் வந்து போகும்
பெருமை என்ன கூறும் பாரும்..
வாட்சப்பில் வாழ்த்துக் குவியும்
வார்த்தை ஜாலம் பெருகித்தள்ளும்
பெருமை அளந்தே காலம் செல்லும்
பெறுமதி இல்லாப் பண்டிகை ஆகும்
சிவதர்சனி இராகவன்
Author: Nada Mohan
11
Nov
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
11-11-2025
உலக மொழிகளுக்குள் தாயவளே
முச்சங்கம் வளர்த்த தமிழ்மொழியே
செம்மொழியே தெவிட்டாமல் நாவுரைக்கும்...
10
Nov
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
ஆறறிவு படைத்த மாந்தரில்
பொங்கிடும் பல உணர்வுப்
பொறியில் சிக்கி ஐந்தறிவு
புடைத்த மிருகம் ஆக்கிடுமே
அறிவில்...
10
Nov
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
இனிவரும் காலம்---
தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும்
தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...