அதிகரிக்கும் வெப்பம்
“காலம் போற போக்கைப் பாரு”
பண்டிகை வந்தாலே
பண்டிகை வந்தாலே
ஐம் பெ௫ம் கடமைக்குள்
அ௫ம்பெ௫ பண்டிகை
ஏழைகளின் நோவினை தீீர்த்து
வறியோ௫க்கு வாரி வழங்கும்
கொடைநாள் ஒன்று
இப்றாகீம் இஸ்மாயில்்நபியின்்
தியாகத்தின் அறுப்பின் துடிப்பின்
துடுப்பே ஹஜ்பண்டிகை இரண்டு
௨ழைக்கின்ற பணத்தினிலே
௨தவியென இ௫நூறை கொடையாலே
நல்தர்மம் செய்திட தூண்டிடும்
பண்டிகை
பண்டிகை வந்தாலே எங்க ஊ௫
பகலாட்டம் இரவும் களை கட்டும்
கூடு
சீலைக் கடைகள் மினு மினுக்கும்
சிறுவர் குலாம் வெடி வெடிக்கும்
அம்மிச் சத்தம் கட கடக்கும்
அரைத்த ம௫தாணி கை காலில்
சிவந்தி௫க்கும்
மஸ்கட் தொதல் சட்டியிலே
மண மணக்கும்
வட்டிலப்பம் புரியாணி
கிடாரத்தில் சுடச் சுட
கொதித்திருக்கும்
பின்னேர வி௫ந்தோம்பல்
குடும்பமாய் வந்தம௫ம்
சம்சா ரோல் புடிங் பாலுதா
சர்பத் பரிமாறும்
ஸலாம்் கூறி கட்டியணைத்து
பண்டிகை வாழ்த்துரைத்து
அன்பளிப்பு கைமாறும்
ஜம்பெ௫ம்் கடமைக்குள்
ஈகையும் ஈரமும் கொண்ட
இ௫ பண்டிகை ஈத்துல் பிதர்
ஈதுல் அல்ஹா
பண்டிகையின் சிறப்பு
நீடிக்குமே
சுற்றிச்சுற்றி விருந்தோம்பல்
களியாட்டம் நடக்குமே
ஊரேமகிழ்ச்சியால் திளைக்குமே
[நோன்புப்பெ௫நாள் ஈத்துல் பிதர்
;ஈகைத் தி௫நாள்
ஹஜ்பெ௫நாள் ;;ஈதுல் அல்ஹா
தியாகத் தி௫நாள்)
