07.11.24 ஆக்கம் 337 பங்களிப்பு

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

வசாவிழான் வீதி
திடீரென விடுவிப்பு
தசவதார அனுரா
தீபாவளிப் பங்களிப்பு
சந்ததி சந்ததியாய்
ஆண்டு வந்து காணாமற் போன வீடு
காணி, கோயில் உட்புகாது
வேலிஅடைப்பு

சந்திக் கடைகள்,
குடி மனைகள் இருந்த
இடமே இல்லாமல்
தரை மட்டமாய்
அழித்தொழிப்பு

அதில் வாழ்ந்தோர்க்கு
வயதோ 50,60,70 க்கு
மேலே ஆயிற்று
இந்த முதியோர்
மீண்டும் புனரமைத்து
வாழக் காத்திருப்பு
அன்று வரை இந்த உயிர் நிலைத்து
இருக்குமா என்ற
வினாவில் அங்கலாய்ப்பு

பார்த்து நிற்கும் தேர்தலில் போர்த்து
இருக்கும் போர்வையில் சோர்ந்து
இருக்கும் மாந்தரில்
இப் பங்களிப்பு படர்ந்திடுமா
இல்லை மீண்டும்
தொடர்ந்திடுமா கடுப்பு.

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் பருவக் காலப் பாதிப்பிலே பங்கு கண்டு பொங்குவாய் உருவக் கோலச் சாதிப்பிலே முங்கியபடியே மொங்குவாய் கரும வினை...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்தகவி இலக்கம் _216 "பொங்குவாய்" தை திங்கள் வந்ததடி தோழி தரணிமெல்ல மகிழ்ந்தடி ஆதவனார் வந்தாரடி! பொங்கலிட்டோம் பூஜை...

Continue reading