முயற்சி தரும் பயிற்சி…

வசந்தா ஜெகதீசன் முயற்சி தரும் பயிற்சி... அயராத முயற்சியில் அர்ப்பணமாகும் அனுதினப் பயிற்சியே அனைத்தையும் ஆளும் கண்ணின் விழியில்...

Continue reading

இதெல்லாம் இப்போ எங்கே????

நேவிஸ் பிலிப் கவி இல(369) 12/12/24

மள மளவென்று மாற்றங்கள்,காண்கின்றோம்
மாறா அன்போடும் பண்போடும் வாழ்ந்த
மானிடர் வாழ்வெல்லாம் இப்போ
எங்கோ தொலை தூர கனவாய்

அதிகாலை வேளையிலே
ஆலய மணியோசையிலே
சேவல்கள் கூவிடும்
பறவைகளின் பண்ணிசை
மெல்லிசையாய் காதில் மோதும்
தூங்கிய கண்களெல்லாம்
விழிதிறந்து ஒளி காணும்

விடிந்தும் விடியாப் பொழுதினிலே
அரிக்கன் லாம்பும் குப்பி விளக்கும்
ஒளி தந்து சேவையாற்ற
ஆலய வழிபாட்டில் பங்கேற்பு
பள்ளி மாணவர்கள் பரபரப்பு

வீட்டிலே ஆரவாரம்
கிணற்றிலே நீரிறைப்பு
உடல் குளிப்பு
ஆடைகளின் துவைப்பு

முற்றம் சுத்தமாகும்
உரலில் இடிக்கும் ஒலியோடு
அம்மி ஒலியும் கரகரக்கும்
உடலுழைப்பில் நலம் கண்டோம்
இயற்கையோடு இயைந்து வாழ்ந்தோம்

பகுந்துண்டு வாழ்தலில் பரவசமானோம்
ஒன்று பட்டு வாழ்தலில் இன்பம் கண்டோம்
இன்று எல்லாம் தொலைந்து போக
இதெல்லாம் எங்கே கிடைக்கும் என்று
தேடுதல் வேட்டையாடுகின்றோம்.
நன்றி வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading