முயற்சி தரும் பயிற்சி..

வியாழன் கவி-2375!!! மண்ணைப் பிளந்துமே கொள்ளும் வைரமும் நிலக்கரி எண்ணற்ற யாவும் பெறவே எத்தனை முயற்சியும் கொள்வார் வானை முட்டி...

Continue reading

20.08.2026 முயற்சி தரும் பயிற்சி-2049 ஜெயா நடேசன்

முயற்சியும் பயிற்சியும் இணைவில் மனித வாழ்க்கை வெற்றி பெறும் விடியலை நோக்கி பயணிப்பில் வாழ்வில் துன்பங்கள் ஓடி...

Continue reading

க.குமரன்

சந்தம் சிந்தும்
வாரம் 293

கவி அழகு

கவிக்கு கவி
கொடுக்க
கவியை நிராகரித்த
மறுப்பில்
ஒர் அலட்சியம்
செய்தாய் !

வார்த்தைகள் அற்ற
மௌனத்திலும்
அழகை தேடுகின்றேன்
எங்கே என்று !

புரியாத புதிரா
நீ இருந்தும்
எனக்கு மட்டும்
நீ கவி

சொல்லி சொல்லிட
முடியாது
பார்வையால் பார்த்திட
முடியாது

எனக்கு நீ
அழகு
உனக்கு யார்
அழகோ ?

பிரமையில் நான்
வாழ
பிரயத்தனம் செய்கின்றேன்
கவி தரும்
கவி தா

க.குமரன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading