தேடும் உறவுகளே…
பேரெழில் நாடு
சக்தி சக்திதாசன்
சந்தம் சிந்தும் சந்திப்பு
பங்கு நீ
காதலென்னும் கானம் என்
காதுகளில் கேட்கும்
காத்திருந்த காலம் என்
கண் வழியே போகும்
மீட்டி வரும் கீதம் அது
கேட்டு வரும் நேசம்
பாட்டிலொரு சோகம் அது
பாதை மாறிப் போகும்
ஓடும் அந்த மேகம் அது
தேடும் வண்ண நிலவை
ராத்திரியின் இருளில் அவை
வழிமாறி அலையும்
ஆதவன் வருகையைத் தாமரை
பார்த்திருக்கும் ஆவலுடன்
பூத்திருக்க ஏங்கியொரு பொழுதில்
மாலையதின் கருக்கலில் மகிழ்ந்தே
மலர்ந்து விடும் அல்லி மதி வரவால்
சேர்த்திருந்த ஆசைகளைக் கூட்டி
பார்த்திருந்தேன் பூமகளைத் தேடி
கண்மணிகள் காய்ந்துவிடும் நிலையில்
பொன்மணியின் ஊர்கோலம் கண்டேன்
செவ்வாயில் மலர்ந்ததொரு புன்னகை
தேன்துளியாய் ஊறின உணர்வுகள்
கண்களுக்குள் காட்சிதனை மூடி
காற்றாகப் பறந்து விட்டேன்
கண்ணயரும் போழுதில் என் கனவில்
கலையாத ஓவியமாய் அவளும்
கவிவரிகள் நெஞ்சினிலே துள்ள
காலவரிகள் ஓவியங்கள் வரைய …
சக்தி சக்திதாசன்
