அபிராமி கவிதாசன்

பங்குனி
……………………….
பங்குனி பிறந்தது படுதுயர் பறந்தது
எங்களின் வாழ்வில் கவிதன் பிறந்தது
கவலைகள் மறைந்தது கருங்குயில் இசைத்தது
பொங்கிடும் அன்பில் பூமழை பொழிந்தது
பங்குனித் திங்கள் பதினே ழென்றால்
தங்கத் தமிழ்மகன் தாய்மண் தொட்ட
பங்கமே இல்லாப் பயன்படு நாளே
செங்கதிர் வீச்சாய்ச் சீர்சால் மழலை
தொங்கிடும் கைகளைத் தூக்கிய நாளே
எங்களின் திருநாள் என்றே மகிழ்ந்தோம்
எங்கள் விடுதலை இனப்போர் தன்னில்
தங்கைமா வீரராய்த் தன்னுயிர் ஈந்தாள்
எங்கவள் பிறப்பாள் என்றே எண்ணினேன்
இங்கவள் மகனாய் என்னுள் பிறந்தாள்
எங்கள் நிலாவே ஈடிலா கவிதனாய்
சங்கே முழங்கெனச் சாற்றும் குறளை
எங்கும் முழங்க இந்நாள் கண்டோம்!
பங்குனி மாதம் பனிபடர் அழகிய
திங்களைப் போற்றுதும்!
திங்களைப் போற்றதும் !

.ஆசிரியை
அபிராமி கவிதாசன்

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

    Continue reading