சாதனை வேண்டும்.

சாதனை வேண்டும்.
சிவருபன் சர்வேஸ்வரி

சாதனை வேண்டுமடி சாதிக்க வேண்டுமடி,
வேதனை வந்தாலும் வெற்றியும் வந்திடுமே
சோதனை என்றிருந்தால் சுதந்திரம் வந்திடாது,
பாரத்தை சுமந்துமிங்கே பாரினில் மிளிர்ந்துவிடு,
ஆயிரம் துன்பங்களும் ஆட்சியாய் வந்தபோதும்,
சாதிக்கப் பிறந்தவளே சரித்திரம் காண்பாயடி,
வல்லமை கொண்டாயடி வலிமையாய் நின்றாயடி,
கள்ளத்தனமில்லை கண்ணே காவியமகளானாய்,

வரமும் கிடைக்குமடி வஞ்சகம் இல்லையெனில்,
அருளும் கிடைக்குமடி ஆணவம் இல்லையெனில்,
புரட்சிகள் நடந்தபோதும் இலட்சியம் தோற்பதில்லை,

வறட்சியில் வாழ்ந்தபோதும் வாய்மையும் அழிவதில்லை,
அன்னை சரஸ்வதியும் அணைத்து நிற்கையிலே,

அன்பும் நிலைக்குமடி அறமும் வெல்லுமடி,

சிவருபன் சர்வேஸ்வரி.

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் நியதி காலத்தின் நியதி கட்டாயமாகும் ஞாலத்தின் நியதி மாறுபாடாகும் பாலமாய் நியதி இணைவாகும் கோலமாய் நியதி வேறுபாடாகும் வாழ்வின் சக்கரம் வரமாகும் வீழ்வதும் உயர்வதும் பாடமாகும் விதியின் விளையாடல் எதுவாகும் விடை புரியாதென்பதே இருப்பாகும் மதியின்...

Continue reading

வணக்கம் வசந்தாஜெகதீசன் வீட்டுத்தோட்டம்...அழகுறுபயனின்பயன்பாடு ஆரோக்கியஉணவின்முதலீடு முயற்சியின்மூலதனமாகும் முழுமையில்மனதுநிறைவாகும்காய்கறி,கனிகள் ருசி நிகரே பொழுதுபோக்கின் முதன்மை வலு முதலீடு அற்ற வருமானம் நித்தம் நித்தம் பயனாகும் பலராய்...

Continue reading