புனித ரமலானே

புனித ரமலானே வஜிதா முஹம்மட் மறையை வழங்கிய மாதம்நீ மனிதம் சிறக்கும் ஈகையின் மாதம்நீ அ௫ளைப் பொழியும் மாதம்நீ அகிலமாழும் இறை...

Continue reading

சக்தி சக்திதாசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு 296
விருப்பு தலைப்பு

இயற்கை அன்னையின்
ஈடில்லா வனப்பினை
கண்குளிர ரசித்திடும்
கவிதைநேரக் கானமிது

மோதிநிற்கும் எண்ணங்கள்
முகில்களாய் கலைந்தோட
வீசிவரும் தென்றலெம்மோடு
விளையாடும் பொழுதிதுவோ

பாய்ந்துவரும் நதியழகும்
பாடிவரும் பறவைகளும்
தேடித்தரும் இதமான
தேனினிமைப் பொழுதன்றோ

பச்சைநிறத் தோரணம்போல்
பாதையெம்க்கும் பச்சையாடை
பாய்ந்தோடும்.நதியெழுந்து
பரவிநிற்கும் வெள்ளைநீராய்

காளையிவன் கண்களிலே
காணுகின்ற காட்சிகள்
காட்டிநிற்கும் வனப்புகள்ஒ
காலமெல்லாம் கூடவரும்

சக்தி சக்திதாசன்

Nada Mohan
Author: Nada Mohan