முதுமை

வசந்தா ஜெகதீசன்
பருவத்தின் படிநிலை
உருவத்தில் தளர்நிலை
அனுபவம் செறிவிலே
ஆனந்த மகிழ்விலே
அடைகின்ற தோற்றம்
ஆனந்த மாற்றம்
கடந்தவை பாடமாய்
கற்றவை தேட்டமாய்
காலமே வியப்புறும்
கடைநிலைப் பருவமே
முதுமையின் முதுசம்
முடங்கிடும் பருவம்
வாழ்க்கையின் தோப்பு
வரமெனக் காத்து
உரமென உராய்ந்த
அனுபவச் செதுக்கலே
முதுமையின் சொத்து
மூத்ததலைமுறை காத்தே
வாழுவோம் வாரீர்!
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் _ 217 "உறைபனி" பூம்பனி பூத்திருக்கு பாத்திருக்க மலருது பார்வைக்கு அழகு பாலரின் மனதுக்கு மகிழ்வு! காடுகள்...

Continue reading