செல்வி நித்தியானந்தன்

செல்வி நித்தியானந்தன்

யார்இவரோ (610)
ஆசியாவிலே அதிகம் வளர்வாய்
ஆபிரிக்காவே உன்தாயகம் என்பாய்
ஆதிமனிதர் இடப்பெயரில் நீயுமாய்
அந்நியசசெலவாணி ஈட்டம் கொண்டாய்

உணவின் பலதும் பயனாய்
ஊட்டச் சத்தும் நிறைவாய்
உணவிலிப் பொருளின் வடிவமாய்
உள்நாட்டிலும் உலகிலும் வலமானாய்

இனங்களிலே இருபத்து நான்காய்
இந்தியாவே அதிகளவு ஏற்றுமதியாய்
விவசாயம் கைத்தறிக்கு அடுத்ததாய்
வேலை வாய்ப்பு கொண்டதாம்

கோடை வந்தாலே பலரதுமோகம்
வாடை என்றாலும் தனிஉருசியும்
ஐாடை காட்டியே எம்மை அழைத்தாய்
தேடியே உன்னை மறைத்காது நானுமே

Nada Mohan
Author: Nada Mohan