இருபக்க வாழ்க்கை

ஜெயம்

சொர்க்கத்தை கருத்தரி சுகங்களை பிரச்சவிக்கின்றது
சுமைகளையும் மறைத்துவைத்து தலையிலே ஏத்துகின்றது
புன்னகையை பூக்கவைத்து வாசத்தை வீசுகின்றது
அழுகையையும் வரவழைத்து விழிகளை குளமாக்குகின்றது

வசந்தங்களை வரவழைத்து கொண்டாட வைக்கின்றது
வருத்தங்களை நுழைத்து திண்டாடவும் செய்கின்றது
நாட்களை சோலையாக்கி வனப்பை சேர்க்கின்றது
முள்ளாகி தைத்துவிட்டு வேடிக்கையும் பார்க்கின்றது

வெற்றியை வசப்படுத்தி துள்ளாட்டம் போடுகின்றது
தோல்வியால் அடிபட்டு துவண்டு வாடுகின்றது
நல்லதாய் அமைத்துகொண்டு சாத்தியமாய் இருக்கின்றது
பொல்லாததை பகிர்ந்துவிட்டு விதியை சாட்டுகின்றது

பிறப்பும் இறப்பும் எழுதப்பட்ட புத்தகம்
மிகுதி பக்கங்களை நிரப்புவதே எம்பணி
வாழ்ந்த பிறகல்ல வாழும்போதே எழுதுவது
மனக்கிறுக்கல்களில் பக்கம் பக்கமாக நிறைகின்றது

Nada Mohan
Author: Nada Mohan