ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர் தமிழ்மணம் கமழும் தேசத்தை நேசித்த நெஞ்சங்களில் சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில் துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க மறந்தனர்...

Continue reading

“பேராசை”

நேவிஸ் பிலிப் கவி இல (509)

நானும் என்றால் அது ஆசை
நான் மட்டும் என்றால்
அது பேராசை

நான் என்ற ஆணவமும்
அவனா என்ற பொறாமையும்
கொண்ட மனிதன் நிம்மதியாய்
என்றும் வாழ்ந்ததில்லை

உலகை வளைக்க ஆசை கொண்டு
பேராசை என்ற சேற்றில் விழுந்து
தம்மையே இழந்து
பெரும் நட்டம் அடைகின்றார்

மதியிழந்து மயக்கம் கொண்டு
இருப்பதை விட்டு
பறப்பதற்கு ஆசை கொண்டால்
அனலிலிட்ட புழுவாய்
துடிக்கும் நிலை வந்திடலாம்

போதுமென்ற மனமே
பொன் செய்யும் மருந்தென்று
சீராய் வாழ்ந்து சிக்கனம் பழகின்
இருப்பதை வைத்து
இன்பமாய் வாழ்ந்திடலாம்
நன்றி,,,,,,,,,

Author:

வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

Continue reading