நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

துறவு பூண்ட உறவுகள் 75

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
30-10-2025

நேசக் கயிறு அறுந்து
நின்றதா ஓரிடத்தில்?
பாச வலையினுள் சிக்கி
பழகிய வாழ்வு எங்கே?

கூடிக் குலாவிய குடும்பம்
கலைந்து போன கோலம்
தாங்கிய உறவுகளும்
தள்ளியே நிற்க

துறவு என்ற எல்லையில்
தனிமரமாய் தானும்
முதுமை பேசும் வலியில்
முனகுகின்றாள் நியத்தில்

துறவு பூண்ட உறவுகளே
திரும்பி பார்க்க வேண்டியதில்லை
உங்கள் பாதை நீண்ட
சௌகரியம் ஆகட்டும்.

Jeba Sri
Author: Jeba Sri