ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர் தமிழ்மணம் கமழும் தேசத்தை நேசித்த நெஞ்சங்களில் சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில் துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க மறந்தனர்...

Continue reading

கண்ணீர் பூக்கள்-2091 ஜெயா.நடேசன்

கார்த்திகை தீபங்களாக
நீங்காத நினைவுகளுடன்
துயில் கொள்ளும் உறவுகள்
மண்ணுக்காக மரித்தவர்கள்
மறவாத மறவர்கள் நினைவில்
மரணம் என்பது முடிவல்ல
மறு வாழ்வின் தொடக்கமே
மண்ணில் புதைக்கப்படவில்லை
மாறாக விதைக்கப்பட்டவர்கள்
கண்மணிபோல் வாழ்ந்தவர்கள்
நிம்மதியில் உறங்கும் உத்தமர்கள்
எம் கண்ணீர் பூக்களை எம்
காணிக்கையாக சமர்ப்பணம்

Author:

வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

Continue reading