முதல் ஒலி

ராணி சம்பந்தர்

புலம்பெயர் மண்ணினிடத்திலே
கண் அயராத தமிழ் மொழியில்
வலம் வந்ததிலே வாசமுடனே
பூத்துக் குலுங்கிய நேசமுடன்
மக்கள் மனதில் கொள்ளை
கொண்ட மகிழ்வின் இனிமை

நாளும் பொழுதும் கேட்டிடவே
கேட்க கேட்க வேண்டும் என்ற
ஆவலில் காத்திருந்த குரலில்
தொடங்கிய சண்ரைஸினிலே
கண்ட முதல் ஒலி சாதனையது

நேரம் போவதே தெரியாததும்
சோரம் போகாது உரமானதும்
கரங்கோத்த அனைவர் பணி
என்றென்றும் மனங் குளிரப்
போற்றிடுமே பெருமையது

இன்று போல் இன்னும் பல
ஆண்டு சேவை தொடரவே
வாழும் காலம் என்றுமே
வாழ்க நீர் வாழ்க என்றே
வாழ்த்துகள் கூறிடுவோமே .

Author:

ராணி சம்பந்தர் ஆறறிவு படைத்த மாந்தரில் பொங்கிடும் பல உணர்வுப் பொறியில் சிக்கி ஐந்தறிவு புடைத்த மிருகம் ஆக்கிடுமே அறிவில்...

Continue reading

வசந்தா ஜெகதீசன் இனிவரும் காலம்--- தொன்மை மறைந்திடும் தொழில்நுட்பம் வளர்ந்திடும் தொடரும் வாழ்வில் சிக்கல்கள் செதுக்கலாய்...

Continue reading