ஆத்மராகங்கள்

சக்தி சிறினிசங்கர் தமிழ்மணம் கமழும் தேசத்தை நேசித்த நெஞ்சங்களில் சுமந்தனர் நஞ்சுமாலையை நெஞ்சில் துணிந்தனர் கொஞ்சும் தமிழ் காக்க மறந்தனர்...

Continue reading

தியாகம் பகுதி 2

ஜெயம்

இரவில் தூக்கத்தை தியாகம் செய்வாள் தாய்
வரவாய் என்னத்தைக் கண்டாள் அறிவானோ சேய்
தாயின் உயிரில் கலந்தது உயரிய தியாகம்
தீயினாலல்ல தூயவள் தன்னையே செய்திடும் யாகம்

அவர்களின் பெயரை கேட்காதே புகழ் உச்சரிக்கும்
அவரருமை மிகு தியாகம் நெஞ்சிலே தரிக்கும்
முற்றிலும் உருகிவிடும் மானுடத்தின் மகத்தான உருவம்
வெற்றியோ அவர் பின்னால் காட்டாரே கருவம்

மனிதன் பெருமை அவன் உயரத்தில் இல்லை
மனிதமே விட்டுச் சென்ற பெருமையின் எல்லை
தியாகம் என்பது செயலல்ல ஒரு சமயம்
சுயநலம் மறப்பின் மேன்மையின் வாழ்வு அமையும்

Author:

வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

Continue reading