15
Jan
சக்தி சிறினிசங்கர்
தை பிறந்தால் வழி பிறக்கும்
மெய்யது என்றே வாழ்ந்தோம்
சிலர் வாழ்வில் தொலைந்திடும் பாதை...
15
Jan
மாற்றத்தின் ஒளியாய்…….
ரஜனி அன்ரன் (B.A) " மாற்றத்தின் ஒளியாய் " 15.01.2026
மார்கழிப் பனியின் திரைவிலக்கி
மானிட...
15
Jan
மாற்றத்தின் ஒளியாய்
-
By
- 0 comments
இரா.விஜயகௌரி
மாற்றத்தின் ஒளியாய்
மனங்களுள் தெளிவாய்
ஏற்றத்தின் படியாய்
துலங்கிடும் எழிலே
காலத்தின் மாற்றம்
கனிந்திடும் பொழுதில்
தொடுத்திடும்...
மாற்றத்தின் ஒளியாய்…….
ரஜனி அன்ரன் (B.A) ” மாற்றத்தின் ஒளியாய் ” 15.01.2026
மார்கழிப் பனியின் திரைவிலக்கி
மானிட வாழ்வினை வனப்பாக்க
மங்கலமாய் வந்துவிட்டாள் தைப்பாவை
இருண்ட வாழ்வினில் உழன்றமானிடம்
ஒளியின் திசையில் தடம்பதிக்க
ஒளிமயமான வாழ்வுசிறக்க
மாற்றத்தின் ஒளியாய் மலர்ந்துவிட்டாள் தைப்பாவை !
விண்ணில் ஒளிரும் செங்கதிர்வீச்சில்
மண்ணில் மலர்ந்தது தைத்திருநாள்
இனிக்கும் மாற்றத்தின் தொடக்கமிது
மனதினில் தேக்கிய கவலைகள் ஒழிய
மாற்றத்தின் ஒளியாய் உதித்திடும் விடியல்
மாந்தர் வாழ்வில் மங்கலம் பொங்கட்டும்
பொங்கு தமிழாகப் பொங்கி வழியட்டும் !
சுழலும் உலகில் மாற்றமே வாழ்க்கை
உழலும் வாழ்வில் உயர்வே வெற்றி
மாற்றத்தின் ஒளியாய் மலரட்டும் வாழ்வு !
Author: ரஜனி அன்ரன்
14
Jan
-
By
- 0 comments
கேள்வியாகப் பிறந்து
பதிலாக உறங்கும்
கேலியான வினாவாகி
மூளையை அரிக்கும்
சொல்லால் சுழன்று
சிந்தையை சோதிக்கும்...
13
Jan
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
உவகை நிறைகின்ற உளத்தின் பொங்கல்
உலகை ஆளும் ஆதவன் நன்றிப் பொங்கல்
இல்லம்...
13
Jan
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
13-01-2026
பூகோள வெப்ப வலயம் எங்கென
பறவைகள் தேடிப் பறக்க அங்கென
பூச்சிகளும்...