தன்னம்பிக்கை 82

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 22-01-2026 சுற்றியிருக்கும் இருள் சூறையாட நினைத்தால் துணிவெனும் தீச்சுவாலை கொழுந்து விட்டெரியட்டும்! விழுந்தால் எழுவாய் விதிதனை வெல்வாய் விடியும்...

Continue reading

கடிகாரத்தின் கணதியில்….

வசந்தா ஜெகதீசன்
கடிகாரத்தின் கணதியில்…
முட்கள் சுழற்சியில் முந்தும் மணி
முனைப்பில் எம்மை சுற்றும் மணி
எதிலும் முதன்மை பெற்ற அணி
ஏற்ற இறக்கும் கணிக்கும் வழி

இரவு பகலை தினசரி மாற்றும்
உழைப்பின் ஊதியம் கணித்தே மதிக்கும்
இறப்பு பிறப்பை இனிதே உரைக்கும்
முட்களின் விவேகமே முந்தும் உலகை
ஓடி ஓடி களைக்காத வேகம்
ஒற்றுமை இரண்டிலும் ஓன்றிய பயணம்
தத்துவ வாழ்வின் தனி வழி சுமக்கும்
ஒற்றைக் கூட்டிற்குள் இரண்டு பாகம்
எண்ணற்ற கண்கள் உன்னையே சுற்றும்
நொடியாய் மலர்ந்து மணியாய் தவழ்ந்து
ஆண்டாய் மலர அடித்தளம்-நீ
கணதியும்அவதியும்காலப்பொருளாய்உன்னிடம்உருளும்உலகே விரைவாய்.நன்றி

Author:

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading