சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

தையும் தமிழும்..

வியாழன் கவி 2277

தையும் தமிழும்..

மொழி துலங்க ஒரு நாள்
விழி வியக்கும் தைத்திங்களில்
ஆண்டுகள் பலவாய் ஆர்ப்பாட்டம்
அவனிக்கு அதுவே விழாக்கோலம்

உழி கொண்டு செதுக்கியதாய்
உயர்வுடன் இதயங்களில் தடம்
முன் தோன்றிய மூத்த மொழி
முனைப்புடன் வளர்ந்தது பா முகம்

பேச்சும் செயலும் பேதமை இல்லா
மூச்சுக் காற்றும் சொல்லும் தமிழ்
இறவாப் புகழுடை மொழியே
மூலாதாரம் முகவரி யாவுமாம்..!!
சிவதர்சனி இராகவன்
22/1/2026

Author: