தன்னம்பிக்கை 82

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 22-01-2026 சுற்றியிருக்கும் இருள் சூறையாட நினைத்தால் துணிவெனும் தீச்சுவாலை கொழுந்து விட்டெரியட்டும்! விழுந்தால் எழுவாய் விதிதனை வெல்வாய் விடியும்...

Continue reading

” உழவும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A) ” உழவும் தமிழும் ” 22.01.2026

தமிழர்களின் பண்பாடு உழவு
தமிழர்களின் உயிர்மொழிதமிழ்
தமிழும் உழவும் உயிரின் இருகண்கள்
முன்தோன்றிய மூத்தமொழி தமிழ்
மண்பிளந்து பொன் விளைவிப்பது உழவு !

ஆதித்தமிழனின் நாவில் மலர்ந்தது அமுதத்தமிழ்
அவன் ஆர்வக் கைகளால்
அழகாய்ப் பிறந்தது உழவுத்தொழில்
தமிழுக்கு அடிப்படையாம் இலக்கணம்
உழவிற்கு அடித்தளமாம் நிலம்
உழவு நம்பண்பாடு அதுதருமே சாப்பாடு
தமிழர் பண்பாடு தமிழ் அதுதருமே அமுதத்தமிழ் !

உழவர் உழைப்பில்தான் உலகத்தவர் பிழைப்பு
உழவன் இல்லாத உலகம் இருளும்
உயிர்த்தமிழ் இல்லாது உணர்வும் இறக்கும்
உணர்வுபெற்றோம் நாம் தமிழாலே
உயிர்பெற்றோம் நாம் உழவாலே !

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading