தன்னம்பிக்கை 82

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 22-01-2026 சுற்றியிருக்கும் இருள் சூறையாட நினைத்தால் துணிவெனும் தீச்சுவாலை கொழுந்து விட்டெரியட்டும்! விழுந்தால் எழுவாய் விதிதனை வெல்வாய் விடியும்...

Continue reading

திங்கள்

அங்கே வான் முகட்டில் ஆடும் வெள்ளிக்கிண்ணம்
இங்கே கவிதை வடிக்க மனம் எண்ணும்
பாதைகளை எரித்து சென்று மறைவான் ஆதவன்
காதலிக்க இரவின் ஒளியில் நிலவே தூதுவன்

மேகப் போர்வையை விலத்தி வெள்ளித் தட்டு
மோகம் கொண்ட கவிஞனுக்கு அழகின் சொட்டு
இரவின் நிழலில் நிலவெனும் அற்புத ஓவியம்
வறுமையில்லா வனப்புடன் நகருதே திங்களின் சீவியம்

குறையாய் பிறந்தாலும்
முழுமை நோக்கி வளர்வது
நிறைவான வாழ்க்கைத் தத்துவமாக மானிடர்க்கு மிளிர்வது
மறையும் வரை வீசும் மங்காத அழகு,
விரைந்து சென்றிடாதேயென பரிதவிக்கும் இரவின் உலகு

ஜெயம்
24-01-2026

Author:

ராணி சம்பந்தர் மார்கழியில் தொங்கிய திங்கள் ஊர் கழிப்பில் தங்கிய சந்திரன் சொந்தக்காரப் பங்கழிப்பன்றோ சிறுவரில் தூங்க அம்புலிமாமியே சிவப்பு...

Continue reading