வரமாகும் வார்ப்புகளே!

நகுலா சிவநாதன்
வரமாகும் வார்ப்புகளே!

வரமாகும் வார்ப்புகளே! வையத்தின் கொடைகள்
உரமாகும் நிலத்திற்கு உள்ளுரப் பசளை
திறனாகும் உழைப்புகளே
தித்திக்கும் வார்ப்புகள்
திசையெங்கும் கிடைத்திடும்
தீந்தமிழின் வார்ப்புகள்

வார்ப்புகள் வண்ணமானால் வையமும் போற்றும்
நாற்றுகள் செழித்தால் நாடே உயரும்
சிப்பி செதுக்கும் சிலையிலும் வார்ப்பு
சிந்தை மகிழும் ஓவியத்திலும் வார்ப்பு
முட்டிமோதி பால்குடிக்கும் கன்றிலும் வார்ப்பு
முழுமனதாய் படைக்கும் படைப்பிலும் வார்ப்புகளே!!

நகுலா சிவநாதன் 1844

(திருத்தம் பதிவு)

Author:

பூக்கட்டும் 116 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 29-09-2026 யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய் சந்தோஷம் பிறக்கட்டும் கண்ணீர் நனைந்த மண்ணினிலே கனவுகள்...

Continue reading

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading