22
Apr
பண்படுமோ பண்பாடு 2183 ஜெயா நடேசன்
மண்வாசம் சொல்லி நிற்கும்
பண்பாட்டு விழுமியங்கள்
கண்ணீரிலே மறைந்த கதை
உறவுகள் தந்த சுகம்
பழமை கற்றுத் தந்த...
மண்வாசம் சொல்லி நிற்கும்
பண்பாட்டு விழுமியங்கள்
கண்ணீரிலே மறைந்த கதை
உறவுகள் தந்த சுகம்
பழமை கற்றுத் தந்த பண்பாடு
கோவில் திருவிழாவும் செல்வதில்
பாரம்பரியத்தை உணர்த்திய
நடை உடை பாவனையில்
பெண்களின் கூந்தலில் கோலமும்
பண்பாடு அருகி வரும் காலமதில்
கண்பட்ட பண்பாட்டால் மருகி
புண்பட்டு போனது மானிட மனமே
உற்றாரை மறந்து உறவை தொலைத்து
தனித்து வாழ்ந்து பலப் பணத்தால்
பேச்சு வழக்கில் அந்நிய மொழி
தாய் படும் பாடு பலதுமாய் சீர்படுத்துமோ
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.