ஆரோக்கிய வலுவும் ஆசனங்களும்..2353

ஐயாயிரம் ஆண்டுகள் முன்பே
வையகத்தில் உதித்த கலையாம்
இந்திய தேசத்தில் தோற்றம்
வேதங்களில் உண்டே ஆதாரம்

முனிவரும் யோகியரும் கற்றே
கற்பிக்கும் கலையாய் மாற்றம்
உடல் நலமும் உளமும் இணைய
திடம் தருமே இதன் ஆசனங்களும்

மருத்துவம் விஞ்ஞானம் கைவிட்ட
மார்க்கம் யாவும் யோகா மூலம்
தீரா நோயும் தீர்ந்ததே இன்று
யூன் இருபத்தி ஒன்று சிறப்பு நாளாம்

மூச்சுப்பயிற்சி பற்பல ஆசனம்
முனைந்து செய்தால் ஆகுமே யாவும்
பாமுக மன்றில் ஜீவன் தந்த தர்ஜினி
ஜீவ யோகா யாவரும் செய்யக் கண்டோம்
சிவதர்சனி இரா
18/6/2026

Nada Mohan
Author: Nada Mohan

பூக்கட்டும் 116 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 29-09-2026 யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய் சந்தோஷம் பிறக்கட்டும் கண்ணீர் நனைந்த மண்ணினிலே கனவுகள்...

Continue reading