நட்பென்றாலே

இரா்விஜயகௌரி

உற்ற வேளை உறுதுணையாகி
சுற்றம் தேடா சுகநலம் பேணி
கனிவுடன் எழுதும் காதலாய் அன்பொடு
தோளை அணைத்து செல்வதாம் நட்பு

பணமும் பொருளும் பதவியும்
மீண்டெழு பொருளாதாரமும்
அத்தனை விடுத்து அகமுறு நட்பு
அகத்தினுள் நிறைத்து ஆராதிக்கும்

செவிவிழு சேதி நலிவுறாவண்ணம்
சேவித்தெழுந்து ஆவன நல்கி
உயர்வுறு பாதை அமைத்திட ஆங்கு
படியாய்நின்று பக்கத்துணயாகும்

இதயம் சுமக்கும் இடர் வரும்வேளை
முன்னே நின்று முதுகெலும்பாகி
அன்புடன் அணைத்துஇடருறா வண்ணம்
இயல்புற நடக்கும் எதிர்பார்ப்பின்றி

Nada Mohan
Author: Nada Mohan

பூக்கட்டும் 116 ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 29-09-2026 யுத்தங்கள் தகர்ந்திங்கு மொத்தமாய் சந்தோஷம் பிறக்கட்டும் கண்ணீர் நனைந்த மண்ணினிலே கனவுகள்...

Continue reading

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading